நாடாளுமன்றம் இன்றுமதியம் கூடுகிறது!
Tuesday, December 18th, 2018
பிரதமர் பதவிக்கு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று(18) மதியம் 01.00 மணிக்கு நாடாளுமன்றம் முதல் முறையாக கூடவுள்ளது.
இன்றைய தினம் (18) ஒத்திவைப்பு பிரேரணைக்கான விவாதம் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னணி தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஆகிய பதவிகள் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் இன்று மதியம் 12.00 மணிக்கு கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த காலங்களில் மூடப்பட்டிருந்த நாடாளுமன்ற மக்கள் பார்வைக் கூடம் மற்றும் சபாநாயகர் விசேட விருந்தினர் கூடம் ஆகியவை வரையறைக்கு உட்பட்ட முறையில் திறக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
160 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!
புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி திறந்துவைப்பு!
மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
|
|
|
காலநிலை மாற்றத்தால் 2020 ஆம் ஆண்டில் ஆசியாவுக்கே பெரும் பாதிப்பு - கிறிஸ்டியன் எய்ட் நிவாரண அமைப்பு ...
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...
சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு" - தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியிட...


