நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – விசேட குழு இன்று கூடுகின்றது!

Wednesday, April 28th, 2021

அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக  ஆராய்வதற்கு  நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று கூடவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில், விசேட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்த கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ சுமந்திரன், ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், அனுர பிரியதர்சன யாப்பா, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அங்கம் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: