நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
Tuesday, May 8th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நீல் இத்தாவெல குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இராணுவ அணிவகுப்புகளும் மற்றும் சில சம்பிதாயப்பூர்வமான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியை, சபாநாயகர், பிரதமர் ஆகியோர் வரவேற்கவுள்ளனர்.
அதன் பின்னர், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட உள்ளார்.
அரசாங்கத்தின் அந்த கொள்கை பிரகடனம் தொடர்பான அறிவிப்பு குறித்த, ஒருநாள் விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.கடந்த தினத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
Related posts:
பயங்கரவாத தாக்குதல் - 23 சிறுவர்கள் உயிரிழப்பு!
வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!
போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து...
|
|
|


