நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
Tuesday, January 9th, 2024
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
நாளொன்றில் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் 70 சுகாதார பிரிவுகளை உள்ளடக்கி நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக வொல்பெகியா என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய நடவடிக்கை!
கடல் மார்க்கமாக இலங்கையில் கொரோனா பரவும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் - பசில் ராஜபக்ச அறிவிப்பு!
|
|
|


