நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, October 6th, 2021
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ‘கிராமத்திற்குத் தொடர்பாடல்’ கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வலையமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பான ஆய்வொன்று, 25 மாவட்டங்களில் 14 ஆயிரம் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டிருந்தது.
குறித்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் ஆணைக்குழுவின் மூலம் தொலைத்தொடர்புகள் சேவை வழங்குநர்களுடன் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் அதிவேக இணைய வலையமைப்பை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டம் 2021 அக்டோபர் மாதம் நிறைவு பெறவுள்ளது.
டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதிவேக இணைய வலையமைப்பு சேவையை தற்போது நாடு தழுவிய வகையில், குறித்த கருத்திட்டத்தை தேசிய கருத்திட்டமாக விரிவாக்கம் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கு தேவையான நிதியை தொலைத்தொடர்புகள் அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்று கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


