நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவில் நிதி மோசடி ? : ஜனாதிபதி!
Sunday, June 30th, 2019
மருந்துப் பொருட்களையும், நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி மோசடிகள் இடம்பெறுவது மேலைத்தேய மருத்துவ துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, “எமது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவ முறைமையானது பெறுமதி வாய்ந்த ஒன்றாகும்.
மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேற்றமடைந்தபோதும் எமது நாட்டின் சுதேச மருத்துவ முறைமையின் பெறுமதியை மிகைக்க முடியாதிருக்கின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!
சமல் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்!
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில்...
|
|
|


