இலத்திரனியல் ஊடகங்களை நெறிப்படுத்த புதிய பொறிமுறை!

Thursday, June 16th, 2016

இலத்திரனியல் ஊடகங்களை நெறிப்படுத்தும் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படும் என பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

இந்த பொறிமுறைமை உருவாக்குவதற்காக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் கோரப்படும்.

அநேகமான இலத்திரனியல் ஊடகங்களில் தொலைக்காட்சி நாடகங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் உரிய தரத்தில் ஒளிபரப்புச் செய்யப்படுவதில்லை. எனவே அவற்றை உரிய தரத்தில் ஒளிபரப்புச் செய்ய ஒர் பொறிமுறைமை அவசியமாகின்றது.

உள்ளடக்கம், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த தர நிர்ணயம் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசாங்கத்தின் நல்லாட்சி கொள்கைகளின் அடிப்படையில் ஊடகங்கள் நெறிப்படுத்தப்படவுள்ளன.

முதல் கட்டமாக அரசாங்க இலத்திரனியல் ஊடகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள அடுத்த வாரத்தில் குழுவொன்று நிறுவப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: