நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை – சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!
வெலிக்கடை சிறைச்சாலையை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும், அதியுட்ச பாதுகாப்பு சிறைச்சாலையாக நிர்மாணிப்பதற்கும், இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமைக்கப்படவிருக்கும் புதிய சிறைச்சாலை பல வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்று சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தள்ளார். ஆனாலும் வெலிக்கடை சிறைச்சாலை மாற்றப்படும் இடத்தை அவர் குறிப்பிடவில்லை.
250 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள புதிய சிறைச்சாலையில் விளக்கமறியல் வசதி, புனர்வாழ்வு வசதி, ஒரு தொழிற்பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு வசதி இருக்கும். “இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சீன அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை கறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கு மாகாணசபை முன்பாக வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்
காச நேய் தாக்கம் :யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 23 பேர் பலி!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


