நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழல் உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, December 21st, 2022
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கேற்பாளர்களான தொழில் துறையினரை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற 2022 தேசிய சிறப்பு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைப் பார்த்து வருந்துவதை விடுத்து, சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இரண்டாம் உலகப் போரினால் அழிந்த ஜப்பானும் ஜேர்மனியும் வளர்ச்சியடைந்தமையை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


