நவாலியில் கால்நடைகளால் பயிர்கள் நாசம்: செய்கையாளர்கள் கவலை!

Sunday, June 24th, 2018

நவாலி வடக்கு – தெற்கு பகுதிகளிலுள்ள பயிர்ச்செய்கைகளை கால்நடைகள் நாசம் செய்து வருவதாக செய்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நவாலி தெற்கில் நங்கன் குளத்தை அண்டிய பகுதி, நவாலி வடக்கில் தலுவில் பகுதி, இடி குண்டடி பகுதிகளில் மரக்கறிப் பயிர்கள், கச்சான், பொன்னாங்காணி, கீரை போன்ற பயிர்ச்செய்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கால்நடைகள் வளர்ப்போர் இரவு வேளைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடுவதால் அவை பயிர்களை உண்டு நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவிலும் தூக்கமின்றி கால்நடைகளுக்காக விழித்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Related posts: