நள்ளிரவுமுதல் வழமைக்கு திரும்புகின்றது மின்சார வழங்கல் – மின்சக்தி அமைச்சு!

Wednesday, April 10th, 2019

தற்போது நடைமுறையில் இருக்கும் மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீராக வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவீ கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட வேண்டும் என அமைச்சர்கள் கூறியதன் காரணமாக அந்த யோசனை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை - கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறி...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க தீ...
பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க தீர்மானம் - ஆணைக்குழு அனுமதி வழங்கினால் தொடர் மின்சார...