நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Wednesday, November 8th, 2023

நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனி தொழிற்சாலையை நெருங்கிய நண்பருக்கு விற்கப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாக ஊடகவியலாளர்கள் திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த நிறுவனத்தை விற்க நாங்கள் தயாரில்லை, இலாபம் ஈட்டும் நிறுவனம், விற்பனை பட்டியலில் உள்ளது உண்மைதான், அதை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நான் இதில் இருக்கும் வரை இதை விற்க விடமாட்டேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்து.

000

Related posts: