நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
Tuesday, August 3rd, 2021
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகை மற்றும் காளாஞ்சியும் கையளிக்கப்பட்டது.
கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையானது சிவஞான முதலியார் பரம்பரையில் கந்தையா தர்மகுலசிங்கம் என்பவரின் இல்லத்துக்குச் சென்று நல்லூர் ஆலய பிரதம சிவாச்சாரியர் கையளித்தார்.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 13 ம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் உற்சவம் சிறப்பாக இடம்பெற திட்ட மிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


