நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
Wednesday, August 4th, 2021
சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில், ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில், எதிர்வரும் நாட்களில் இருந்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் எயாழ் மாநகரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உயர்தர பரீட்சை முறைகேடுகளை விசாரணை செய்ய விசேட குழு!
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!
விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
|
|
|


