நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
Friday, August 9th, 2024
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!
போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு ஆ...
|
|
|


