நல்லிணக்க முயற்சியாக இந்திய மீனவர்கள் ஐவர் விடுதலை!
Thursday, November 3rd, 2016
இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களில் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று 4 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் ஒரு நல்லிணக்க செயற்பாடாகவே குறித்த விடுதலை இடம்பெற்றுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப வாடகைக் கட்டணம் குறைப்பு!
மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை பிரதமர் மஹிந்தவிடம் கையளிப்பு!
அதியுச்ச பாதுகாப்பு வளையத்துள் கொழும்பு - 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மாறக்கூ...
|
|
|


