நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அறிவிப்பு!
Saturday, July 29th, 2023
மன்னார் மாவட்டத்தில் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுகொள்வோருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
இந்த நலத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரை வங்கி கணக்குகளை திறக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
நாளை ஞாயிறு (30) மற்றும் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறையாக உள்ள போதும் வங்கிகள் விசேடமாக திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க முடியும்.
எனவே தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கியில் வங்கி கணக்கை திறந்து சமர்ப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


