நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் பலி!

நயினாதீவு நாக பூசணிஅம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழாவுக்கு சென்ற எட்டுப் பேர் அடங்கிய இளைஞர் குழுவொன்று நயினாதீவு கடலில் நீராடிய போது அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் நாராயணன் கோவிலடியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். பலியாகிய இளைஞர்களில் இருவர் சகோதரர்கள் ஆவர்.
மூவரது சடலங்களுக்கும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
ஜூன் மாதம் முதல் மண்ணெண்ணெய்க்கான மானியம்!
வல்லை மதுபான சாலையில் வாய்த்தர்க்கம் - போத்தல் குத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!
டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பதிவாகும் வீதம் அதிகரிப்பு - உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், ...
|
|