நயினாதீவில் கடல் கொந்தளிப்பு: அச்சத்தில் மக்கள்!

நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் நயினாதீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் கொந்தளிப்பதால் வழமையை விட அலை வீதி வரை வருவதாகவும், இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மார்கழி மாதத்தில் கடல் கொந்தளிப்பது சாதாரணமான விடயமாகவே காணப்படுகின்றது.எனினும் இந்த முறை கடல் கொந்தளிப்பு என்பது வழமையை விட அதகமாக காணப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஏற்படவுள்ள ஆபத்து தொடர்பில் வெளிநாட்டு இணையத்தளங்கள் முன்னரே சுட்டிக்காட்டி இருந்தன. இந்த நிலையில் இலங்கைக்கு மேற்கே கொழும்பிலிருந்து 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் பலத்த தாழமுக்கம் நிலை கொண்டிருந்ததுடன், நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றி - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு - அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்...
அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்த...
|
|