நயினாதீவிற்கு படகுகளில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு அங்கி கட்டாயம் அணிய வேண்டும் – வீதி அபிவிருத்தி அதிகார சபை!
Friday, June 22nd, 2018
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு அங்கிகளை கட்டாயம் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் இறங்கு துறையில் இருந்து படகுகள் மற்றும் கடற்பாதை மூலம் ஆலயத்திற்கு தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
தற்போதைய பருவபெயர்ச்சி காற்றின் தாக்கத்தினால் பக்தர்களின் தற்பாதுகாப்பு கருதி கட்டாயம் பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்று படகு உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பக்தர்களும் கட்டாயம் பாதுகாப்பு அங்கிகளை அணிந்து பயணிக்க வேண்டும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுள்ளது. ஆலயத்தில் மகோற்சவத்தை முன்னிட்டு விசேட திருவிழா காலங்களில் கடற்பாதையின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Related posts:
மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதே எமது அரசியல் இலக்கு - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவர...
சவேந்திரசில்வா நியமனம்: மனித உரிமை பேரவை கவலை!
பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் இல்லை – நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு ஜ...
|
|
|


