நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்பட்டது!
Wednesday, June 21st, 2017
வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தமிழரசு கட்சியினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், அவர்களை தாமாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் கோரியிருந்தார்.அத்துடன், மேலும் இரு அமைச்சர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து, வடமாகாணத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசியிருந்த நிலையில், அண்மையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.
குறித்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சருக்கு எதிராக கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீளபெறப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


