நட்பு அடிப்படையிலேயே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!

நண்பர்கள் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகளைச் செய்வதைப் போன்றே அமெரிக்காவினால் இலங்கைக்கு அவசியமான மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் இலங்கை மக்களுக்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக எந்தவொரு நபரும் பணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் பிரத்தியேக விமானமொன்றின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தன.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி - ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கைக்குள் நுழைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனா...
|
|