நடைமுறைக்கு வருகின்றது போக்குவரத்து அபராதத் தொகை அதிகரிப்பு !

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அபராத தொகையானது, 30-50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய அபராதத் கட்டண விபரம் –
அதிக வேகத்தில் செல்லல் – ரூபா.3000
போக்குவரத்து விதிகளை மீறல் – ரூபா. 2000
பொலிஸ் கட்டளைகளை புறக்கணித்து பயணித்தல் – ரூபா. 2000
பாதையில் இடையூறாக பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துதல் – ரூபா.2000
ஆலோசனை உரிமம் பத்திரம் இல்லாமல் ஆலோசகராக ஈடுபடல்– ரூபா. 2000
வருவாய் உரிமங்களைக் காண்பிக்காததற்கு – ரூபா. 1000
வாகனத்தில் அதக ஒலி எழுப்புதல் – ரூபா.1000
வாகனத்தினை பாதையில் நிறுத்துதல் – ரூபா.1000
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாதவிடத்து – ரூபா.1000
வாகனப் பட்டி (பெல்ட்) இடாமை – ரூபா. 1000
பொருத்தமற்ற ஒலிகளை எழுப்புதல் – ரூபா.1000
Related posts:
|
|