நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை – அதிகார சபை!
Monday, November 12th, 2018
ஜனவரி மாதம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேங்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் சந்தையில் விநியோகிக்க வேண்டுமென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போத்தல் மற்றும் ஏனைய பொதிகள், எண்ணெயின் வகை, தயாரிப்பு, காலவதியாகும் தினம், சில்லறை விலை, எடை, தயாரிப்பாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
டிசம்பர் விடுமுறையில் சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள்!
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையம் தொடர்பில் கூறப்படும் வாதத்தை நம்பத் தயாரில்லை – இராணுவத் தளபதி...
எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கென வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
|
|
|


