நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவு!

மீன்பிடி வலைகளை கடற்தொழிலாளர்களுக்கு விற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலாளர்களிடம் இருந்து பெற்ற நிதியை மீள அவர்களுக்கு வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்பிடி வலைகளை வாங்கிய கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது மீன்பிடி வலைகள் தரக்குறை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியதனை அடுத்தே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
Related posts:
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு - வர்த்தக அமைச்சர் பந்த...
வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்ப...
சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடு - பத...
|
|