நடமாடும் வாகனங்களில் தேங்காய் விற்பனை!
Friday, September 29th, 2017
திங்கட்கிழமைமுதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். தேங்காய் விலை அதிகரிப்பு பற்றி உடனடியாக கவனம் செலுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார்.
Related posts:
பல்கலை பணியாளர்களுக்கும் 2500 ரூபா சம்பள உயர்வு?
4.7 ட்ரில்லியன் கடன்கள் குறித்த எந்த கணக்காய்வும் நடத்தப்படவில்லை!
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது - நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைக்கும்...
|
|
|


