நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக அமையும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் கட்சி மாறும் அரசியல் வாதிகளுக்கு சிறந்த பாடம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை செல்லுப்படியான, சட்டரீதியான நடவடிக்கை என உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள காரியப்பர்,
அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கி நான் அனுப்பிய கடிதம் நியாயமானது, செல்லுப்படியானது என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.
நசீர் அஹமட்டை மு.கா.விலிருந்து நீக்கும் தீர்மானம் செல்லுபடியாகும்; உயர் நீதிமன்றம் அறிவிப்பு
இனிவரும் காலங்களில் அமைச்சு பதவிகளுக்காக கட்சி மாறும் நபர்களுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை எனக் கூறியுள்ளார்.
அதேவேளை நசீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை சட்டரீதியானது மற்றும் செல்லுப்படியானது என உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கடந்த 20, 25 ஆண்டு காலத்தில் இப்படியான வழக்குகளில் தீர்ப்பு மற்றைய தரப்பு சாதகமாகவே வழங்கப்பட்டு வந்தது எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
000
Related posts:
|
|