நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் துரிதமாக விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதலீட்டுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பயன்படுத்தப்படாத காணிகளில் அப்பகுதிகளுக்குரிய பயிர்களை பயிரிடுவதற்காக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|