நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வெள்ளி தோறும் சைக்கிளில் வேலைக்குச் செல்வதற்கான விஷேட திட்டம்!

Saturday, October 29th, 2022

நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) தனது ஊழியர்கள், வாரத்துக்கு ஒருமுறை சைக்கிளில் பணிக்கு வருவதற்கான விஷேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.

ஒக்டோபர் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரும் ‘உலக நகரங்கள் தினத்தை’ குறிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைக்கிள்களைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்ல வேண்டும்.

சைக்கிள்களை வாங்குவதற்கான நிதி மற்றும் அவற்றை பாதுகாப்பாக நிறுத்த இட ஒதுக்கீடு உட்பட, சைக்கிளில் வேலைக்குச் செல்லத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமது ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், “சைக்கிள் வெள்ளி – சைக்கிளில் வேலைக்கு வாருங்கள்” நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பணம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு நவம்பர் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல செத்சிறிபாய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: