நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்து!

Monday, January 30th, 2023

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

அத்துடன் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட தொகை 457 மில்லியன் ரூபாயாகும். இத்திட்டத்தின் 99% பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன.

கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவது, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதும் பராமரிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: