தோழர் ரங்கன் அவர்களின் மாமியாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Saturday, December 19th, 2020
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அவர்களின் மாமியார்
விஸ்வலிங்கம் செல்வராணி அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
அன்னார் உடல்னலக்குறைவு காரணமாக இன்றையதினம் காலமானார்.
இன்நிலையில் தெல்லிப்பளையில் உள்ள அன்னாரின்
இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
இதன்போது கடையின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமுர்த்தி ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் மற்றும் கட்சியின் முக்கியஷ்தர்களும் கலந்துகொண்டு அஞ்சலிமரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


