பிரபாகரனை முட்டளாக்கிய ஜே.ஆர் ஜயவர்தன!

Monday, February 6th, 2017

இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன தெரிவித்திருந்ததாக ஆணவமொன்றின் மூல் செய்தி கசிந்துள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாணத்தை விடுதலை புலிகளிடம் இருந்து மீட்பதற்கு இரண்டு தடவைகள் இலங்கை இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்தே இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரமே இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு  வருகைதந்த அமெரிக்க இராஜாதந்திரியான பீற்றர் கல்பிரித்திடம், யாழ்ப்பாணத்தை மீட்குமாறு தமது படையினரிடம் இரண்டு தடவைகள் கூறியதாக ஜயவர்தன கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 1,200 இந்திய படையினர் கொல்லப்பட்டிருந்தனர். 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் உடன்படிக்கை செய்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டும் காணப்படுகின்றது.

ஜே.ஆர். ஜயவர்தன – ராஜீவ் காந்தி ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை பகிர்வதாகவும் தமிழை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதாகவும் வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்திய படையினர் இலங்கைக்கு அனுப்பட்டிருந்தனர்.

1988 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் விட்டுக்கொடுப்பற்ற போக்கு குறித்து விமர்சித்த ஜே.ஆர்.ஜயவர்தன, பிரபாகரன் ஒரு முட்டாள் எனவும் கூறியதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ இன் ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜே.ஆர் ஜயவர்தனவிற்கு வேறு உதவிகள் கிடைக்காத நிலையில், அவர் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த ஜே.ஆர்.ஜயவர்தன தீர்மானித்ததாக சி.ஐ.ஏ இன் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல்களை நடத்துவதாக அமெரிக்க இராஜதந்திரியிடம் ஜே.ஆர் ஜயவர்தன கூறியுள்ளார். இதன்பிரகாரம் 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தேர்தல்கள் நடைபெற்றிருந்தன.

இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்பட்டதாகவும் அமெரிக்க இராஜதந்திர கூறியுள்ளார்.

jr-jayawardene

Related posts: