தோழர் தவராசாவின் சகோதரரின் மறைவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
Friday, September 4th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான தோழர் சி.தவராசா அவர்களின் சகோதரர் சி. தங்கராஜா இன்றையதினம் அவுஸ்திரேலியாவில் (04.09.2020) காலமானார்.
அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஆன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் பங்கொடுத்தும் கொள்கின்றது.
அமரர் சி. தங்கராஜா முன்நாள் பரந்தன் இரசாயன தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றியிருந்ததுடன் அதன்பின்னர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்துவந்திருந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக சில காலங்கள் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் காலமான அமரர் சி. தங்கராஜாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினது துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்’கின்றது.
Related posts:
|
|
|


