வெளியேறுகின்றார் கீதா–உள்ளே வருகின்றார் பியசேன

Tuesday, May 9th, 2017

இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இவ்விடயத்தை பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்ததேசப்பிரிய அடுத்தகட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இரட்டைபிரஜாவுரியைக் கொண்டுள்ளகீதாகுமாரசிங்கபாராளுமன்றஉறுப்பினர் பதவியில் இருக்கமுடியாது எனக்கூறி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு அமைவாக,மேல் நீதிமன்றம் கடந்த  3 ஆம் திகதி பாராளுமன்ற பதவி செல்லுபடியற்றதென தீர்ப்புவழங்கியிருந்தது.

இதன்காரணமாகவே காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதனிடையே வெற்றிடமாகவுள்ள கீதாகுமாரசிங்கவின் இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பியசேனகமகேயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

Related posts: