தோட்டக் கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது – சம்பள உயர்வு விவகாரம் குறித்து அமைச்சர் கெஹலிய எச்சரிக்கை!
Wednesday, January 20th, 2021
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக் கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்பட முடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் – “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவாகும்.
அந்த முடிவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது. அதில் வரும் சவால்களை அரசாங்கம் எதிர்கொள்ளும். கடந்த காலங்களில் 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
களம் இருந்தாலும்போட்டியை நடத்த முடியாதள்ளது - மஹிந்த!
மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கட்டும் - பிரதமர் மஹிந்த ...
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!
|
|
|


