களம் இருந்தாலும்போட்டியை நடத்த முடியாதள்ளது – மஹிந்த!

Wednesday, March 15th, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமாவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டி சில்வெஸ்டார் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர் தேர்தலை நடத்துவதில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லலையெனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த தேசப்பிரிய ”தேர்தல் தாமதமாவதாக பொதுமக்கள் என்னையே திட்டித்தீர்க்கின்றனர். பேஸ்புக்கிலும், பத்திரிகைகளிலும் என்னை வைத்து கேலிச்சித்திரம் வரைகின்றனர். எனினும் அவைகள் வரவேற்கத்தக்கவை. பொதுமக்களின் வெறுப்பு ஏதோ ஒரு வகையில் வெளிவரவேண்டியது அவசியம். எனினும் என்னை திட்டுவதில் பயனில்லை. என்றாலும் திட்டு வாங்குவதற்கு நான் தயார்.

இதனால் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் பாதிப்பு ஏற்படவில்லை. பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்குரியது. சட்டத்தை உருவாக்குவதற்கு மக்கள் நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளித்துள்ளனர். ஆகவே தேர்தல் புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடைபெறவேண்டுமென நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். தேர்தல் நடைபெற்றே ஆகவேண்டும். தேர்தலை ஒத்திவைக்க எங்களுக்கும் விருப்பமில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். ஆளும் அதிகாரம் தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆகவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல் நடைபெறவேண்டும்.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே காணப்படுகின்றது. தேர்தல் முறை, எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல விடயங்களில் பொதுமக்களுக்கு குழப்பம் காணப்படுகின்றது. இது கிரிக்கெட் கதை போன்றுதான் மைதானம் இருந்தாலும் சட்டத்தை உருவாக்காமல் போட்டியை நடத்த முடியாது. விக்கெட் இருந்தாலும், நடுவர்கள் இருந்தாலும் மைதானம் இன்றி போட்டியை நடத்துவது சாத்தியமாகாது.“

Related posts: