தொழில் வாய்ப்பை இழந்துள்ள 10,000 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
Thursday, July 30th, 2020
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப எதிர்ப்பார்ப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
சுமார் 40,000 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது வங்கி தரவுகளை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
உள்ளாட்சித் தேர்தல்: சுவரொட்டிகளுக்கு தடை!
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு!
|
|
|


