தொழில் புரியச்சென்று வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

குவைத் நாட்டுக்கு தொழில் புரியச்சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நேற்றுஇரவு, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்றுமுன்தினமும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 183 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.
சவுதி அரேபியாவில் இருந்து 75 பேரும் சிங்கப்பூரில் இருந்து 67 பேரும் கட்டாரில் இருந்து 28 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அவர்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|