தொழில்நுட்ப கல்வி அபிவிருத்திக்கு ஒபெக் நிதி உதவி!
Monday, July 9th, 2018
சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் உதவியின் மூலம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி மற்றும் திறனை விருத்தி செய்யும் விசேட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.
இது தொடர்பான விசேட ஒப்பந்தம் ஒன்று ஒஸ்ரியாவின் வியனா நகரில் OFID Director-General Suleiman J Al-Herbish க்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச். சமரதுங்கவுக்கும் இடை யில் கடந்த 3 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
13 வருட கட்டாய கல்வி கொள்கையை முன்னெடுக்க கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்கள் பயிற்சிகளும் அவசியமாகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிரத்தியேக கல்வியை மேம்படுத்த பல தொழில்நுட்ப ஆய்வு சாலைகளை கல்வியமைச்சு நிர்மாணிக்கவுள்ளது. 60 தசம் ஏழு மில்லியன் டொலர் செயற்றிட்டத்தின் கீழ் பிரத்தியேக கல்வி விருத்தி மற்றும் ஆசிரியர் பயிற்சி திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் ஒபெக் நிதியம் 50 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளது.
Related posts:
|
|
|


