தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்குவாதிகளின் சிந்தனைகள் மீண்டும் மக்களிடம் எடுத்தச்செல்லப்பட வேண்டும் – இரா.செல்வவடிவோல்!

Sunday, May 20th, 2018

அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்கு வாதிகளின் சிந்தனைகள் மறைக்கப்பட்டு இன்று முதலாழித்துவ வர்க்கத்துடன் முற்போக்குவாதிகள் சிலர் சமரசம் செய்யும் நிலை உருவாகியதால்தான் இன்றும்  தொழிலாளர் வர்க்கம் தமது உரிமையை நிலைநிறுத்த தொடர்ந்தும் போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பனைதென்னைவள கூட்டுறவுச் சங்க சமாச மண்டபத்தில் இன்று நடைபெற்ற மேதின உரிமையும் உழைப்பாளர் ஐக்கியமும் என்ற முற்போக்குவாத தலைவர்களின் நினைவுகூரல் நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உலக தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ளும் ஒர் உரிமை சாசனமாகத்தான் இருந்துவருகின்றது.

ஆனாலும் முற்போக்கு வாதிகளால் செயற்படுத்தப்படும் இந்த உழைப்பாளர் தினம் இன்று முதலாழித்துவ வாதிகளின் பின்னால் சமரசம் செய்யப்பட்டு மதவாதங்களுக்கு பின்னால் எடுபட்டுச் செல்லும் நிலை உருவாகியுள்ளமை வேதனையானது.

ஏழைகளின் வலிகளையும் உழைப்பாளர்களது வேதனைகளையும் தாங்கிய முற்போக்குவாதிகளின் சிந்தனைகள் எமது இளைஞர் மத்தியிலிருந்து மறைக்கப்படுவதால்தான் இன்று எமது இளைய சமூகம் தடம்மாறிச் செல்வதைக் கூட தடுக்கமுடியாது இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில் இன்று மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முற்போக்குவாதிகளை மீண்டும் எமது இளம் சமூகத்தினரிடையே கொண்டுசெல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு உருவாக்கித் தந்துள்ளது.

அத்துடன் துன்பத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்யும் முற்போக்குவாதிகளின் சித்தார்ந்தங்களை எல்லாம் இன்றைய சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு வழிகாட்டியாக அமைய இந்த நிகழ்வு வழிகோல வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்தவகையில் திசைமாறிச் செல்லும் எமது இளைஞர்களை, எமது இனத்தை ஒருதிசை நோக்கி வழிநடத்திச் செல்ல இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு வழிசமைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்பதாக குறித்த நிகழ்வின்போது முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரது உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அவர்களது ஞாபகங்கள் பகிரப்பட்டு நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: