தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாதியர்கள் முடிவு!

தமது வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களை குறைப்பதற்கு எதிராக எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுமுறை நாட்களை குறைப்பதன் காரணமாக தாதியர்கள் மட்டுமல்லாமல் நோயாளிகளும் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தாதியர் சேவையில் தற்சமயம் சுமார் 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவ்வெற்றிடங்கள் காரணமாக தாதிமார்கள் வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது - சுதர்சினி ப...
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவ...
நாளொன்றுக்கு 4 தொன் சுத்திகரிப்பு நிலையம் - சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான ச...
|
|