தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Saturday, July 11th, 2020

பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பல்வேறு காரணங்களால் திணைக்கள ஒழுக்கக் கட்டுப்பாட்டினை மீறி பொதுச்சேவை ஆணைக்குழு எமது தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளது.

இத்தகைய அரசியல் பழிவாங்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்திற்கு ஏற்றவாறு செயற்பட வேண்டியது சுகாதார அமைச்சின் செயற்பாடாகும். இதனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் எதிர்வரும் தினங்களில் சரிசெய்யப்படாது விடின் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான சுகாதார குழு கடந்த ஒரு மாதகாலமாக சந்திக்கவில்லை, கூட்டங்களை நடத்தவில்லை. இந்த குழு கூடி கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இரண்டாவது சுற்று வைரசினை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.

சுகாதார வழிமுறைகளை பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பின்பற்றாது விட்டால் இரண்டாம் சுற்று ஆபத்து நிச்சயம் உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: