இலங்கையின் பிணையெடுப்புக்கான பணிக்குழாம்மட்ட உடன்படிக்கை மார்ச் 20 இல் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும்!

Wednesday, March 8th, 2023

இலங்கையின் பிணையெடுப்புக்கான பணிக்குழாம்மட்ட உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு மார்ச் 20 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன்மறுசீரமைப்புக்கான எழுத்து மூல சான்றிதழ்களைப் பெற்றுள்ளதால் சர்வதேச நாணய நிதியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு எழுத்து மூலமான ஆதரவை சீனா வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த எழுத்துமூல ஆதரவு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு மிக நெருக்கமானதாகவும், அதன் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதியை பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த எழுத்துப்பூர்வ ஆதரவின் மூலம் உரிய உத்தரவாதத்தைப் பெறுவதில் இருந்த மிகப் பெரிய தடை ஒன்று நீக்கப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: