தொழிநுட்ப உதவிகளை வழங்க தயார் – பொதுநலவாய அமைப்பு!
Monday, January 16th, 2017
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்த பணிகளுக்கு தொழிநுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்க தயார் என.பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ‘பெட்ரிசியா ஸ்கொட்லேட்’ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளரை சந்தித்திந்த போதே, அவர் இதனை தெவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பை மாற்ற தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.அது சிறுபான்மை இன மக்களுக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் எனவும், அதற்கு தொழிநுட்ப உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் பொது செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
நாடு முழுவதும் குளிரான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் - அரசாங்கம் அறிவிப்பு!
பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...
|
|
|


