பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022

செப்டெம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது நாட்டிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மெதுவாக ஆனால் நிலையான அதிகரிப்பைக் குறிக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி, செப்டம்பர் 1ஆம் திகதிமுதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 10 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனையடுத்து, ஆண்டுக்கான மொத்த வருகைகள் 5 இலட்சத்து 7 ஆயிரத்து 226 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்கான தினசரி வருகை விகிதம் ஒரு நாளைக்கு 979 சுற்றுலாப் பயணிகளாகும் என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் இந்தியா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: