தொல்லியல் திணைக்களம்: சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை – ஜனாதிபதி!

Thursday, January 26th, 2017

இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொல்லியல் மையங்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் மேலுமொரு விசேட கலந்தரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது மேற்படி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொல்லியல் மையங்களின் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் செயற்பாடுகள் தொடர்பிலுள்ள தடைகளை நீக்கி அவற்றை முறைமைப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் தொல்லியல் மையங்களின் பாதுகாப்புக்காக சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இனங்காணப்பட்ட தொல்லியல் மையங்களின் பாதுகாப்புக்காக ஏற்கனவே சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக் காட்டினார். அவர்களது தங்குமிட பிரச்சினைகளை தீர்த்துவைப்பது தொடர்பாகவூம் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு தொல்லியல் தொடர்பான அறிவை வழங்கும் செயற்திட்டத்தின் தேவையும் முன்மொழியப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் மையங்களை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்புக்காக பொருத்தமான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் வரலாற்று மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பௌத்த தேரர்கள் பாராட்டினார்கள். இந்த கலந்துரையாடலில் தொல்லியல் துறையுடன் தொடர்புடைய அலுவலர்களும் பௌத்த துறவிகளும்; பங்குபற்றினார்கள்.

maithiripala-55445d1

Related posts: