தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து செயற்படவில்லை – முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலைப்பகுதியில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் ரி.சரணராஜா முன்னிலையில் இன்றைய தினம் உத்தரவிற்காக திகதியிடப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த பகுதியை பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து செயற்படவில்லை என நீதிவான் அறிவித்துள்ளார்.
நீதிமன்றில் குறித்த பகுதிக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு நடத்தப்பட்ட பரிசீலனைகளுக்கு அமைய இன்றைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2018 ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான புதிய கடவுச்சீட்டு
ஊர்காவற்துறை - அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
|
|