தொலைபேசி கட்டமைப்பை சீரழிக்கும் தொலைபேசி இலங்கையில் கண்டுபிடிப்பு!
Friday, June 2nd, 2017
இலங்கையில் செயற்படும் தொலைபேசி கட்டமைப்பை செயலிழக்க செய்யும் கம்பிகளற்ற தொலைபேசி ஒன்று சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி மூலம், தொலைபேசி கட்டமைப்புகளுக்கு அழுத்தம் பிரயோகித்து செயலிழக்கச் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அதனை தவிர்க்குமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பதாக ஆணையத்தின் பதில் இயக்குனர் E.M.P.K ரத்னபால தெரிவித்துள்ளார். இவ்வாறான 50 தொலைபேசிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.அதனை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Related posts:
தொடருந்து போக்குவரத்தில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் - இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க!
சவாலான சூழ்நிலையிலும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கு ஒன்றபட்டு உழைப்ப...
ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அ...
|
|
|


