தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டத்தை வலுப்படுத்துங்கள் – அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை!

Thursday, August 12th, 2021

தொற்று நோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டம் ஒரு ஆதாரமாக உள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அபிவிருத்தியடைந்த அரசுகள் கொழும்புத் திட்டத்திற்கு தமது ஆதரவை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்புத் திட்டத்தின் 47 ஆவது ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் ஆரம்ப அமர்வில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

உலகளாவிய காலநிலை சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாதலால், கொழும்புத் திட்ட உறுப்பு நாடுகள் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தி புதிய மற்றும் சவாலான உலகளாவிய சூழலில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கையான ‘நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை’க்குள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘பசுமை மற்றும் ஸ்மார்ட்’ நகரங்களின் இலக்குக்கு ஏற்ப, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிலையான பசுமை நகரங்களை உருவாக்குவதற்கான கொழும்புத் திட்டத்திற்குள் திட்டங்களை ஊக்குவிப்பதறகான இலங்கையின் விருப்பத்தை அறிவித்திருந்தார்..

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் தொழில்நுட்பத் தாக்கத்தை தொடர்ந்தும் எதிர்கொள்வதற்கு விரைவான நகரமயமாக்கல் வழிவகுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் நிலையான நகரங்களை உருவாக்குவதற்கு முதலீடுகள் தேவைப்படுவதால், திறன் அபிவிருத்தி, பசுமைத் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு நிலையான நம்பகமான பொதுச் சேவைகளின் அபிவிருத்தி போன்ற உதவிகள் மூலம் நாடுகள் ஆதரிக்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

சுற்றுச்சூழல் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டிய நாடுகளின் நிதிக் கடனை ஈடுசெய்வதற்காக சாதகமான வருமானத்தை வழங்குவதற்காக, பசுமை சுற்றுச்சூழல் கலந்துரையாடல்களில் முன்மொழியப்பட்ட முன்னுதாரண மாற்றத்தில், இலங்கையைச் சேர்ந்த உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலரான பேராசிரியர் ரணில் சேனாநாயக்கவையும் வெளிநாட்டு அமைச்சர் மேற்கோள் காட்டினார்.

Related posts: