சீனா – இலங்கை இடையே 61.5 பில்லியன் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்து – கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிவிப்பு!

Wednesday, August 18th, 2021

கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் இலங்கை செய்துகொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த உதவித்திட்டம் வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், நிதி ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: